யாழ் விபத்தில் இளைஞன் பலி : வாகன கதவினை திறக்கும் போது அவதானம் (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக இருந்தவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் தாவடியை சேர்ந்த மாணவரான தே. நிரோஜன் (17) உயிரிழந்தார். இம்மாணவனை மோதிய பட்டா ரக வாகன சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள கடையின் முன் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகிய விபத்து காட்சியில் வீதி ஓரத்தில் முறையற்ற விதத்தில் தரித்து நின்ற வான் சாரதி சடுதியாக வாகன கதவை திறந்த போது மாணவன் கதவுடன் மோதுண்டு வீதியில் விழுந்த தருணத்தில் பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மாணவனை மோதிக்கொண்டு செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.

இதனை பயன்படுத்தி காட்சியில் பதிவாகிய வானின் இலக்கத்தை மோட்டார் போக்குவரத்து பிரிவில் வழங்கி வாகன உரிமையாளரின் தரவைப் பொலிஸார் பெற்றுக்கொண்டதை அடுத்து குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தளத்தை சேர்ந்தவர் எனவும் குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -