மூன்று பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு..!

பா.திருஞானம் -
டந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாரபட்சம் காட்டப்பட்டது. பெரும்பான்மை பாடசாலைகக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை பாடசாலைகளுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காக ஒரு தமிழ் அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரி, மன்னார் சித்திவிநாயகர் இந்து மத்திய கல்லூரி, மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (17.06.2016) திறந்து வைத்தார். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டனர். பாடசாலையின் அதிபர்கள் தலைமையில் நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

எமது மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைய வேண்டுமானால் அவர்களுக்கான வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.அதனை அரசாங்கமே செய்ய வேண்டும். கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்கின்ற பொழுது அது அனைவருக்கும் சமமாக பகிரப்படவேண்டும். அதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அப்படி பாரபட்சம் காட்டப்பட்டால் அது அந்த சமூகத்தையே பாதிக்கும். அவ்வாறான நிலைமைகளில் நாட்டில் தேவையற்ற விரும்பத்தகாத பிரச்சினைகள் உருவாகும். எனவே அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைத்தால் நாடும் சமாதானமாக இருக்கும் மக்களும் சந்தோசமாக இருப்பார்கள்.இந்த விடயத்தை அரசாங்கத்தின் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களும் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே எமது நாட்டில் சமாதானத்திற்கு பங்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாம் எமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். இதனை ஈடு செய்ய முடியாது.எனவே எதிர்வருகின்ற காலங்கள் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முக்கிய காலகட்டமாக அமையும். அது வட கிழக்கு மக்களாக இருந்தாலும் சரி மலையக மக்களாக இருந்தாலும் சரி.நாங்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.எங்களுக்கள்ளே பேதங்கள் இருக்கக் கூடாது.

நான் கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த நாடு முழுவதற்கும்.நான் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். நாங்கள் வெகு விரைவில் கணித விஞ்ஞான ஆசிரியர்கள் 100 பேரை வடகிழக்கு பகுதிகளில் இருந்து மலையக பாடசாலைகளுக்கு நியமிக்க இருக்கின்றோம். அதன் மூலமாக உங்களுடைய வேலை வாய்ப்பு பிரச்சினை தீர்க்கப்படுகின்றது. எங்களுக்கும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பார்கள். இப்படி நாங்கள் ஒற்றுமையாக விட்டுக் கொடுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாமாகும்.

நான் வடகிழக்கிற்கு விஜயம் செய்கின்ற பொழுது இங்கிருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் முதலமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்து செயற்படுவதை பார்க்கின்ற பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தனியே நான் மட்டும் கைதட்டினால் சத்தம் வராது நாங்கள் எல்லோரும் சேர்ந்து தட்டினால்தான் சத்தம் வரும். இந்த நிலைமை அனைத்து மாகாணங்களிலும் ஏற்பட வேண்டும். அரசியலையும் கல்வி அபிவிருத்தியையும் வெவ்வேறாக பார்க்க வேண்டும். எனவே இதனை சிந்தித்து செய்படுவோம் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரியில், அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம், இரண்டு மாடி இணை பாட செயற்பாடுகளுக்கான வகுப்பறை கட்டிடம் ,மூன்று மாடி தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (17.06.2016) திறந்து வைத்தார். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டனர். புதிய கட்டிடங்களையும் அதிதிகள் அழைத்துவரப்படுவதையும் அங்கு இடம்பெற்ற கலை நகிழ்வுகளையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -