உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மெல்லுட் கவுசொக்லு சபாநாயகர் கரு ஜயசுரிய, இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் குறிப்பாக வியாபாரம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்தும் பேசப்பட்டது. அண்மையில் அமைச்சர் ஹக்கீம் துருக்கி சென்றபோது அங்கு கலந்துரையாடப்பட்ட தேயிலை ஏற்றுமதி வியாபாரம் தொடர்பாகவும் இக் கலந்துரையாடலில் பின்தொடரப்பட்டது. இலங்கை எயார் லைன்ஸ் விமான சேவை மற்றும் துருக்கி விமான சேவையுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான சாத்தியப்படுகள் தொடர்பாகவும் துருக்கி வெளிநாட்டு அமைச்சர் இவ்விஜயத்தில் ஆராயவுள்ளதகவும் தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அணர்த்தத்தை போன்று எதிர்காலத்திலும் இவ்வாறான அணர்த்தங்கள் ஏற்படுமாயின் அதற்கு துருக்கி உதவ தயாராக உள்ளதாக துருக்கி வெளிநாட்டு தூதுவர்கள் இங்கு தெரிவித்தார்கள்.
இலங்கை நாட்டுக்கான துருக்கி உயர்ஸ்தானிகர்அ, ண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அணர்தத்திற்கு உதவி வழங்கிய துருக்கி அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.