கல்குடாத் தொகுதியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுமா ஹமீதின் வரவுடன் ஒரு அலசல்

டந்த இரு தினங்களாக ஊடகங்களில் அலசலும் புரசலுமாக பேசப்பட்டு வந்த விடயம் தான் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரதியமைச்சர் அமீர் அலியின் தீவிர செயற்பாட்டாளருமான கே.பி.எஸ்.ஹமீட் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு செயற்படப்போவதாக வெளிவந்த செய்தியாகும்.

அதனை கௌரவ முதலமைச்சர் நசீர் ஹாபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஓட்டமாவடி மீன் சந்தைக் கட்டத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு தவிசாளர் ஹமீட் அவர்களே வெளிப்படையாக ஊர்ஜிதப்படுத்தியுள்ளதை ஆதாரபுர்வமான வீடியோ ஒளிப்பரப்புக்களிலிருந்து எம்மால் அறிய முடிகின்றது.

உண்மையில், தவிசாளர் ஹமீட் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இனணந்து கொண்டு செயற்படுவதால் மாத்திரம் கல்குடாவில் கட்சி வளர்ச்சியின் பாதையில் இட்டுச்செல்லுமா? என்ற கேள்வி அநேகரின் மனதில் எழும்பியிருக்கலாம்.

ஏனெனில், தற்போதய சூழ்நிலையில் அகில மக்கள் காங்கிரஸ் தலைவர் அமீர் அலி அவர்களைப் பாராளுமன்றம் செல்ல அல்லும் பகலும் அயராதுழைத்த தவிசாளர் கே.பி.எஸ் ஹமீட்டை தனது தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதி அமைச்சர் அமீர் அலி புறக்கணித்து வந்ததற்கான பின்னணிக்காரணம் கல்குடாப் பிரதேசத்தில் வாக்கு வங்கியில்லாத ஒருத்தரை எதிர்வருங் காலங்களில் தேர்தலில் களமிறக்குவதை விட, மக்கள் செல்வாக்குள்ள தற்போதய சூழ்நிலையில் அதிகமான மக்களால் விரும்பப்படுகின்ற பிரதேச சபைஉறுப்பினர் இலவத்தம்பி அஸ்மியை களமிறக்குவதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்ற ஐயங்கள் தென்படுகின்றன

கடந்த இரு தினங்களும் கல்குடாவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் என்றே கூற வேண்டும். ஏனெனில், தவிசாளர் ஹமீட்டின் வருகை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு பக்க பலமாக இருந்தாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் அது ஒரு பாரிய இழப்பாகவே இருக்குமென்பதில் எவ்வித ஆட்சேபனையுமுமில்லை.

எது எதுவாக இருந்தாலும், தவிசாளர் ஹமீட்டின் அரசியல் வாழ்க்கை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் எவ்வளவு காலம் நீடிக்குமென்பது தான் அடுத்த கணம் நாம் சிந்திக்க வேண்டும்……? கல்குடாவின் அரசியல் வரலாற்றில் நாமறிந்த வகையில் இக்கட்சியினூடாக அரசியல் முகவரி பெற்ற பலர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரோ அல்லது தேர்தலில் தோல்வியுற்று தாம் எதிர்பார்த்த அரசியல் சுகபோகம் கிடைக்காத விடத்தோ கட்சியை விட்டு விலகி மாற்றுக்கட்சியுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸூக்கெதிராகச் செயற்பட்டவர்கள்தான் இக்கல்குடா பிரதேசத்தில் அதிகம் இருக்கின்றார்கள் என்பதை நாமறிந்து வைத்திருக்கின்றோம்.

பெயர் குறிப்பிட்டுக்கூட சுட்டிக்காட்ட முடியும். அதற்கு தவிசாளர் ஹமீட் மாத்திரம் விதி விலக்கானவரல்ல என்று உறுதி செய்ய முடியாது.

இன்னுமொரு தவறு இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியிருக்கின்றது. மேடைகளில் வாய் கிழிய (protocol) நெறிமுறையை பற்றிப்பேசும் முதலமைச்சர் தான் ஓட்டமாவடி சந்தை திறப்பு விழாவில், அந்த நெறிமுறையைத் தவற விட்டுள்ளார்.

முதலாவது, தவிசாளர் ஹமீட் கட்சி மாறுமிடத்து அதனை உத்தியோகபூர்வமாகக் கட்சித்தலைவரின் சிபாரிசின் பெயரில் அவரின் முன்னிலையிலும் கல்குடாப்பிரதேசத்திலுள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர் முன்னிலையிலும் ஊர்ஜிதப்படுத்திய பின்னரே அதனை ஊடகங்களுக்குப் பகிரங்கமாக வெளிக்காட்டியிருக்க வேண்டும். அதனை அவர் தவற விட்டுள்ளார்.

இரண்டாவது, ஓர் பிரதேசத்திற்கான அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கமோ மாகாண அமைச்சோ நிதியொதுக்கீடு செய்யுமாகவிருந்தால், அதனைச் செயற்படுத்துவதற்கு முன்னர் அப்பிரதேசத்திலுள்ள மத்திய குழுவோடும் அவ்வூரிலுள்ள கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களுடன் கைகோர்த்து அதனை நடைமுறைப்படுத்துவதே ஓர் அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாகும். இல்லையென்றால், சாதராண பொது மகனுக்கும் அரசியல்வாதிககும் எந்தவித வித்தியாசமுமில்லாமல் போய் விடும் நெறிமுறையும் அங்கு தூக்கி வீசப்பட்டு விடும். அது தான் ஓட்டமாவடி சந்தைக்கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் மறைமுகமாக நடைபெற்றிருக்கின்றது.

கல்குடாப்பிரதேசத்திலிருக்கின்ற கட்சியின் தலைவருக்கும் கட்சிக்கும் நம்பிக்கையான உயர்பீட உறுப்பினர் என்றால், அது கணக்கறிஞர் றியாழ் அவர்களாகத்தான் இருக்கு முடியும். கட்சியும் தலைவரும் இவருக்கு மிக்க நன்றிக்கடன் பட்டிருக்கின்றனர் என்றே கூற வேண்டும். ஏனெனில், கடந்த பொதுத்தேர்தலில் கல்குடாவிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறங்குவதற்கு பல படித்த மேதைகள் எல்லாம் தயங்கினார்கள். அதற்கான காரணம் மேலோட்டமாகப் பார்ப்போமேயானால், அவர்கள் இக்கட்சியினூடாக களமிறங்கி தோற்கடிக்கப்படுமிடத்து மாற்றுக்கட்சியினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகுவோம் என்ற அச்சமோ அல்லது தனது சுய கௌரவத்துக்க இழுக்கு ஏற்பட்டு விடுமென்ற எண்ணமாகவும் இருந்திருக்கலாம். அது அவர்களின் உரிமை. அதில் நாம் தலையிடவில்லை. ஆனால், அவ்விடத்து தலைவர் ரவூப் ஹக்கீம் சிபாரிசு செய்தார் என்ற ஒரே காரணத்திற்காகவும் கட்சியின் நலனுக்காவும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தேர்தலில் களமிறங்க முன்வந்தவர் தான் இந்த கணக்கிஞர் றியாழ். ஆகவே தான் அவருக்கு பொது மக்களாகிய நாமும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

அது வேறாக இருந்தாலும், அவர் தேர்தலில் களமிறங்கி மிகக்குறுகிய கால பிரச்சாரத்திலயே அவரின் நடை, உடை, பாவனையில் மக்களைக் கவர்ந்து ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளையும் பெற்று சாதித்துக்காட்டினார் என்பது வேறு விடயம். அது மட்டுமன்றி, இன்று வரை ஏதோ ஒரு வகையில் கட்சியின் மூலமோ தனது சொந்தப் பணத்தின் மூலமோ கல்குடா வாழ் மக்களுக்கு சேவை செய்து கொண்டும் இருக்க கூடிய இளைஞர்களின் இளம் தலைமை தான் கணக்கறிஞர் றியாழ் அவர்கள் என்பதில் எவ்வித ஆட்சேபனைமுமில்லை.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் முதலமைச்சர் இவரை ஒழித்து, கல்குடாவில் அரசியல் செய்ய முற்படுவாராக இருந்தால் நிச்சயம் அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதற்கப்பால் முதமைச்சரையே அது வளர்ச்சியின் பாதகை்கு இட்டுச் செல்லும் என்பதை சில அரசியல் ஆய்வாளர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இதன் பிற்பாடாவது முதலமைச்சர் இது போன்ற தவறுகளை விடாமல் (protocaol) அரசியல் நெறிமுறையையும் மனித நேய நெறிமுறையைும் பின்பற்றி, அரசியல் செய்ய வேண்டுமென்று கல்குடா வாழ் பொது நலன் விரும்பிகளில் ஒருவனாகவே இவ்விடத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

வை.எம்.பைரூஸ் 
வாழைச்சேனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -