புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம் தனியார் சட்டங்கள் பாதுகாக்கப்படுமா?

ரு நாட்டு சாதாரண சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டுமென்பது பொதுவான நியதியாகும். சட்டங்களை மீள் பரிசீலனை செய்கின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இருந்தால் ( post enactment judicial review) சாதாரண சட்டங்களின் அரசியலமைப்பிற்கு முரணான பாகங்களை வலுவற்றதாக்க முடியும். தற்போது அந்த அதிகாரம் இல்லை. புதிய அரசியல் யாப்பில் அந்த அதிகாரங்கள் வழங்கப் படலாம் .

அதே நேரம் தற்போதைய யாப்பின் சரத்து 16 இன் படி , 1978 ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்படுகின்ற பொழுது இருந்த எழுதிய மற்றும் எழுதாத சட்டங்கள் யாப்பிற்கு முரணாக இருந்தாலும் செல்லுபடியாகும் . இது தொடர்பாக அன்று விமர்சனங்கள் எழுந்த போது அன்றைய ஜனாதிபதி J R ஜெயவர்த்தனா , தனியார் சட்டங்களைப் பாதுகாப்பதற்கு சரத்து 16 தேவை என்றார்.

புதிய யாப்பில் தென் ஆபிரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை தழுவி, அரசியலமைப்பிற்கான பொருள் கோடல் அரசியலமைப்புச் சட்டத்தின் , அடிப்படை மனித உரிமைகள் சட்டத்தின் பெறுமானங்களைத் ( constitutional values in general and the values of the Bill of rights in particular ) தழுவியதாகவும் சர்வதேச சட்டங்கள், குறிப்பாக சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அவற்றின் பெறுமானங்கள் (Values) ஆகியவற்றைத் தழுவியதாக செய்யப்பட வேண்டுமென ஒரு சரத்து உள்வாங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறன்றது.அதே நேரம் சரத்து 16 பெரும்பாலும் இல்லாமக்கப் படலாம்.

அவ்வாறு செய்யப்பட்டால் தனியார் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு இசைவாக பொருள் கோடல் இடப்படும் என்பது மட்டுமல்ல அவற்றின் பெறுமானங்களுக்கு ஏற்பவும் பொருள் கோடல் அதாவது வியாக்கியானம் செய்யப்படும் .

இங்கு கவனிக்க வேண்டியது, சட்டம் என்பதும் சட்டத்தின் பெறுமானம் என்பதும் ஒன்றோடொன்று தொடர்புபட்ட போதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாகும் .

பெறுமானம் என்பது (values) நிலையான ( static) ஒன்றல்ல. அது மாறக்கூடியது. ( dynamic) உதாரணமாக, ஓரினத் திருமணம் அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது ஒருகாலத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் அங்கீகரிக்கப்படாத இழிவான ஒரு செயலாகத்தான் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. எனவே சமூகப் பெறுமானம் மாறியிருக்கின்றது .

சமூகப் பெறுமான மாற்றங்கள் சட்டப் பெறுமானங்களில் தாக்கம் செலுத்தும் . அதே நேரம் முஸ்லிம் சட்டப் பெறுமானங்கள் மாறுவதில்லை. அவை நிலையானவை. ஏனெனில் அவை அல்லாஹ்வின் நியதிகளுக்கு உட்பட்டவை. உதாரணமாக, திருமணமாகாத ஆணும் பெண்ணும் உறவு கொண்டாடுவது 1400 ஆண்டுகளுக்கு முன்பும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை , இன்றும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என்றும் ஏற்றுக்கொள்ளப் படாது. இந்நிலையில் தனியார் சட்டத்தில் நமக்கு இருக்கின்ற சில சலுகைகள் நீதிமன்ற பொருள் கோடலூடாக மறுக்கப்படுகின்ற அல்லது மாற்றப் படுகின்ற வாய்ப்பு இருக்கின்றது .

தனியார் சட்டங்கள் பாராளுமன்றத்தினால் மாற்றப் படலாம் . அவ்வாறான சூழ்நிலையில் நாம் அரசியல்ரீதியாக போராடலாம். ஆனால் அம்மாற்றங்கள் நீதிமன்றத்தினால் செயற்படுத்தப் படும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. பாராளுமன்றமும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அரசியல் அமைப்பிற்கு இசைவாக நீதிமன்றம் பொருள் கோடல் செய்யும்போது பாராளுமன்றமும் தலையிட முடியாது. அப்படியானால் அஅரசியலமைப்புச் சட்டத்தைத்தான் மாற்ற வேண்டும். அது அவ்வளவு இலகுவானதல்ல.

எனவே, ஒல்லாந்தர் எமக்குத் தந்த உரிமையை, பிரித்தானியர் கைவைக்காத உரிமையை, J R பாதுகாத்துத் தந்த உரிமையை இந்த நல்லாட்சி கைவைக்க அனுமதிக்கலாமா?

அவ்வாறாயின் அதற்கு தீர்வு என்ன? தற்போதைய சரத்து 16 தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பது ஒரு தீர்வாகும் . ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்திப்படும் என்று கூறமுடியாது . அடுத்த வழி தனியார் சட்டங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு proviso வை உள்வாங்குவதாகும். அதாவது ' சகல சட்டங்களும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏதுவாக இருக்க வேண்டும் ' என்ற நியதியிலிருந்து தனியார் சட்டங்களுக்கு விலக்களிக்கப் படவேண்டும் . சரத்து 16 நீக்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் சிலர் இந்த விதிவிலக்கிற்கு சாதகமான கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள் . ஆனால் நமது பிரதிநிதிகள் இதனை எவ்வாறு செயற்படுத்தப் போகின்றார்கள் என்பதுதான் கேள்வியாகும் .

19 வது திருத்தத்தில் அரசியலமைப்புச் சபையில் (constitutional council) ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் உள்வாங்கப் படுவதை உறுதி செய்ய முடியாதவர்கள் இதனை எவ்வாறு செய்யப்படும் போகின்றார்கள் .
எனவே, சமூகம் பின்னாலிருந்து செயற்பட்டாலேயொழிய விடயங்கள் எதையும் உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -