மத்திய மற்றும் மாகாண அதிகாரத்திலுள்ளவர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதி தண்ணீரில் எழுதிய கதைபோல் காணமுடிகிறது.குறிப்பாக எமது கிழக்குமாகாணத்தில் எத்தனையோ பட்டதாரிகள் பல்வேறுபட்ட துறைகளில்,ஆங்கில மொழிகளிலும் பட்டத்தை பெற்று வேலைவாய்ப்பை எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.
சுமார் 3வருடங்களை தாண்டியும் வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.தற்காலத்தில் எந்தவொரு தரப்பாலும் (மத்திய,மாகாண பிரதிநிதிகள்)கவனிப்பாரற்று இருக்கிறது. தேர்தல் காலங்களில் வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதிககள் ஒன்றுகூடல்களை மேற்கொள்ளும் பிரதிநிதிகள் அதிகாரம், அந்தஸ்துகளை பெற்றதும் மறந்துவிடுகின்றனர்.
ஊவா,வட மற்றும் ஏனைய சிலமாகாணங்களில் ஆசிரியர்சேவைக்கு நேர்முகபரீட்சை வைக்க முடியுமென்றால் ஏன் எமது கிழக்குமாகாணத்தில் இவ்வழிமுறையை பின்பற்ற முடியாது. கெளரவத்துக்குறிய அதிகாரத்திலுள்ளவர்களே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பம் (அதிகாரம், ஆட்சி,பிரதிநிதி) முடிவதற்குள் வேலைவாய்ப்பு விடயத்தில் கவனம்செலுத்தி தீர்வுகாண முன்வாருங்கள்.ஒவ்வொரு பட்டதாரிகளின் பிரார்த்தனையும் உங்களுடைய வெற்றிக்கு வழிவகுக்கும். #தாய்மண்நேசன்