கடிதத்தின் பிரதியை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் - ஞானசார தேரர்

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வையுங்கள் நாங்கள் பயப்படுவோமா என பார்க்கலாம். இது சிங்கள் பௌத்தர்களின் நாடு, இது சவுதியோ, பாகிஸ்தானோ, ஆப்கானிஸ்தானோ அல்ல. எமது முன்னோர்களின் இரத்தத்தில், கண்ணீரில் கட்டியெழுப்பிய நாடு இது. இதனை கொல்லையடிக்க முற்படுபவர்களுக்கு எதிராக நாம் அன்றும் செயற்பட்டோம், நாளையும் செயற்படுவோம்.

முஸ்லிம் கவுன்சிலுக்கு சுருக்கமாக சொல்லவேண்டியது என்னவென்றால் இந்த நாட்டில் பிக்குகளுக்கு நல்லிணக்கத்தை கற்பிக்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை.” என மிகவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -