க.கிஷாந்தன்-
அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்தில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க 17.06.2016 அன்று பிற்பகல் வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவ் அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நாட்டி வைத்தார்.
இவ் வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், ஆர்.ராஜாராம், என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.