தெஹிவளை பள்ளிவாயல் விவகாரம் - பாராளுமன்றில் இன்று

தெஹிவளை, களுபோவில ஸ்ரீ மகா விஹார வீதியில் அமைந்துள்ள அல்-மத்ரஸா பௌசுல் அக்பர் பள்ளிவாயலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு எதிராக பிரதேச வாழ் கடும்போக்கு பெளத்த தேரர்களினால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் மற்றும் பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள தடை குறித்து விசேட கூட்டம் ஒன்று இன்று 10 அம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறவுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயகவின் தலைமையில் காலை 10:30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் கொழும்பு பள்ளிவாயல்கள் சம்மேளனம், அல்-மத்ரஸா பௌசுல் அக்பர் பள்ளிசாயல் நிர்வாகசபை உறுப்பினர்கள். RRT சட்டத்தரணிகள் சங்கம் உட்பட முஸ்லிம் அரசியல் வாதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறித்த பள்ளிவாயல், வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை விஸ்தரிப்பிற்கான வரை படம் மாநகர சபையின் அங்கீகாரம் பெற்றது. இது அனைத்தையும் நன்றாக தெரிந்திருந்த நிலையிலேயே, கடும்போக்கு அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக பள்ளிவாயலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு பொலிஸார் தடை விதித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதால், முஸ்லிம்களுக்கு சாதகமான பதில் கிட்டுமென தாம் எதிர்பார்ப்பதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -