மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத குளிரூட்டி சேவையை மீளத் துவங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு – கொழும்பு புகையிரத குளிரூட்டப்பட்ட சேவை தற்பொழுதுஇயங்கமால் இருப்பது தொடர்பில் முதலமைச்சருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அச்சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அவர் அமைச்சரையும் அதிகாரிகளையும் கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக இது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

முதலமைச்சரின் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மட்டக்களப்பில் இருந்து ஒவ்வொருநாளும் கொழும்பு நோக்கிச் செல்லும் கடுகதி புகையிரத சேவையில் குளிரூட்டி பொருத்திய தனியான பகுதி இயங்கிவந்தது.

ஆனால், கடந்த இரண்டு வாரமாக அக்குளிரூட்டி பொருத்திய பெட்டி சேவையில் இல்லை என்றதும் வழமையான பயனிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே மட்டக்களப்பில் இருந்து அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் புகையிரத சேவை இடைநிறுத்ப்பட்டுள்ளது. உல்லாசப் பயணத்துறையை வளப்படுத்துவதற்காக கிழக்கு மாகாண சபை முழுமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கையில் இவ்வாறான நிகழ்வுகள் அதற்குத் தடையாக உள்ளன.

கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட சிறந்த மாகாணமாகவும் எதிலும் குறையற்ற அனைத்தும் எங்களாலும் முடியும் என்ற துணிவுடனும் ஒவ்வொன்றையும் செய்து கொண்டு வரும் இந்நிலையில் இப்படியான வேலைகள் கவலையளிப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -