பி.எம்.எம்.ஏ.காதர்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமைஇன்று (25) மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதில் விஷேட விருந்தினர்களாக நீதிபதி அழ்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ்,ஏ.டபள்யு.ஏ.ஹப்பார்,அஷ்செய்க் என்.ஜி.அப்துல் கமால்,எம.;ஐ.ஏ.பரீட் பறகத் டெக்ஸ், எம்.எம்.ஜமால்தீன், ஏ.ஆர்.அபூபக்கர் ஆகியோருடன் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .
உறுப்பினர்களுக்கு பேரித்தம் பழப்பொதிகளும் வழங்கப்பட்டன சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ்,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தினார்கள்.