உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மட் அலி (வயது 74) காலமானார்.
அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அவரது உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம் மதத்தை தழுவியதன் பின்னர் தன் பிறப்பு பெயரை முஹம்மட் அலி என மாற்றிகொண்டார்.
இவர் கலந்து கொண்ட 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளார்.