வடக்கு கிழக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தி பயிற்சிக் கல்லூரிகள் அமைக்கப்படும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

ஹாசிப் யாஸீன்-
டக்கு கிழக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு மாவட்டங்கள் தோறும் விளையாட்டு பயிற்சி கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமாhன சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டு கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய மர்ஹூம் ஏ.எச்.இர்சாட் வெற்றிக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி வியாழக்கிழமை (02) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.ஐ.வாஹித், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.கே.அதிசயராஜ் உள்ளிட்ட விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டி அட்டாளைச்சேனை சோபர் அணியை எதிர்த்து நிந்தவூர் றியல் இம்ரான் அணி மோதியது. இதில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது லக்கி விளையாட்டுக்கழகத்தின் வீரர்களும், நிர்வாகத்தினரும் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் விளையாட்டுத்துறை சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,

எமது நாட்டில் பல்வேறு துறைகளுக்கே இன்று வரை ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டிலிருந்து விளையாட்டுத்துறைக்கு ஜனாதிபதி விருது வழங்கி வைக்கப்பட்டதன் மூலம் நாட்டின் விளையாட்டுத்துறைக்கு ஜனாதிபதியும், பிரதமரும் முக்கியத்துவம் வழங்கியுள்ளதையிட்டு விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாட்டு வீரர்கள் பல சாதனைகளை விளையாட்டுப் போட்டிகளில்; புரிவார்கள் என்பதில் ஐயமில்லை.

நாட்டில் நிலவும் நல்லாட்சியில் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு நாடளாவிய ரீதியாக இன வேறுபாடுகளுக்கு அப்பால் விளையாட்டுத்துறை அமைச்சினூடாக நிதிகள் ஒதுக்கீடு செய்ய முடிந்துள்ளது. இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதேசங்கள் அனைத்துக்கும் நிதிகள் பரவலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றோம். குறிப்பாக எமது பிரதேச வீரர்களுக்கான முறையான விளையாட்டுப் பயிற்சிகளை வழங்க மாவட்டங்கள் தோறும் விளையாட்டு பயிற்சி கல்லூரிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன் எனவும் தெரிவித்த்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -