பா. திருஞானம்-
தொடர்ந்து மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிபடைந்துள்ளமை யாவரும் அறிந்த விடயம். இதனால் தீர்மாணிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்த நேரத்தில் செய்து கொள்ள முடியதா நிலை தோன்றியுள்ளது.
அவ்வாறான நிலையில் கம்பளை அம்புலுவாவ வத்தகல பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக 20 குடும்பங்களை சேர்ந்த 77 பேர் இடம் பெயர்ந்து அம்புலுவாவ தர்மசார விகாரையில் தங்க வைக்கபட்டனர். இந்த அனர்தம் காரணமாக 19.05.2016 ஆம் திகதி அன்று நடாத்த நிச்சயிக்கபட்ட திருமணம் ஒன்று இடை நிறுத்தப்பட்டது. ஆறுமுகநாடார் செல்வகலஞ்சியம் என்ற திருமண பெண்னும் இந்த அனர்த்த முகாமிற்கு இடம் பெயர்ந்து இருந்தார். மாப்பிளை கலஹா பிரதேசததை சேர்நத எஸ்.சந்திரபோஸ்.
இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு ஏற்பாடகி இருந்த நிலையில் அனர்த்தம காரணமாக அனைத்து விடயங்களும் தடைபட்டன. கட்டுவதற்கான தாளியும் செய்யபட்டு;விட்டது. இதனை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க கூடாது என்ற இந்துக்களின் சமய தத்துவத்திற்து அமையவும் இந்த திருமணத்தை சில தினங்கள் கழித்தவாது நடாத்த வேண்டும் என பெரியோர்கள் தீர்மாணித்ததற்கு அமையவும் திருமணத்தில் தாளி கட்டும் நிகழ்வு கம்பளை இந்து கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் இனிதே நிரைவேறியது. நண்பர்கள் அனத்தத்தில் பாதிக்கபட்ட மற்றும் அரச அதிகாரிகள் விகாரையின் பிரதான விகாராதிபதி உட்பட அனைவரும் தம்பதிகளை வாழ்த்தினர்.
தொடர்ந்து அனர்த முகாமான அம்புலுவாவ தர்மசார விகாரையில் திருமண பதிவும் விருந்து உபசபரமும் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே, உடபளாத்த பிரதேச செயலக செயளாளர்;, விவாக பதிவாளர், கிராம சேவகர் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
தற்போது இவர்கள் தங்கள் வாழ்க்கையை அனர்த்த முகாமிலேயே ஆரபித்து உள்ளனர். இருந்தும் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை தற்போது இவர்களுக்கு தோன்றியுள்ளது.; இவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் உதவிகள் எதிர்பாக்க்படுகின்றது. இந் நிலையில் திருதிருமதி எஸ்.சந்திரபோஸ் செல்வகலஞ்சியம் தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.