எம்.வை.அமீர்-
2016-06-07 ஆம் திகதியன்று சாய்ந்தமருது தோணாவில் தவறி விழுந்த கட்டாக்காலி மாடு ஒன்று வீதியால் சென்றவர்களின் தீவிர முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டது.
அரசியல்வாதிகளால் தங்களது அரசியல் லாபத்துக்காக காலத்துக்குக் காலம் சாய்ந்தமருதில் முன்வைக்கப்படும் அபிவிருத்திகளில் பிரதானமானது, அந்த ஊரை ஊடறுத்துச்செல்லும் தோணாவின் அபிவிருத்திதான்.
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி என்ற பேரில் பல கோடிரூபாய்கள் செலவு செய்து தோணாவின் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தேர்தலுக்கான வாய்ப்புக்கள் இல்லாததன் காரணமாக ஆரம்பித்த அத்தனை அபிவிருத்திகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
கடந்த கால அபிவிருத்தித் திட்டத்தின் போது தோணா ஆழமாக்கப்பட்டுள்ள நிலையில் சல்பீனியாத் தாவரம், ஆட்களை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. தவறி விழுந்த மாடு ஒன்றினாலேயே தன்னை பாதுகாத்து வெளியேறமுடியாத நிலையில், குழந்தைகளோ அல்லது பாதசாரிகளோ தவறி விழுந்தால் தங்களை பாதுகாப்பது கஸ்ட்டமே!
ஊர் பற்றுள்ளவர்களே அரசியல் வாதிகளே சம்மந்தப்பட்ட அதிகாரிகளே சாய்ந்தமருது மக்களின் அவலத்தை சற்று பார்க்க மாட்டீர்களா?