முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற ரணசிங்க பிரேமதாசாவின் பிறந்த தினமான ஜூன் 23ஆம் திகதியை முன்ணிட்டு தேசிய வீடமைப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு நாடுமுழுவதிலும் வீடமைப்பு பல்வேறு வீடமைப்பு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச தெரவித்தாா்.
இன்று (22)ஆம் திகதி செத்திரிபாயாவில் உள்ள வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவா் அங்கு தொடா்ந்து தெரிவிக்கையில்;
கடந்த ஆண்டு ஜூன் 23ஆம்திகதி இத்தினத்தினை தேசிய வீடமைப்பு தினமாக அமைச்சரவையில் சமா்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்டு ஒவ்வொரு வருடம் இத்தினத்தினை கொண்டாடு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 23 ஆம் திகதியில் கம்உதாவ திட்டம் உருவாக்கினாா். இதன் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தன.
ஜூன் 23 ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினத்தினை முன்னிட்டு ஹம்பாந்தோட்டையில் ”சம்பந்கம” எனும் வீடமைப்பு எழுச்சிக் கிராமம் திறந்து வைக்கபடும். இத்திட்டத்தினை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாா்க்காா் தலைமையில் திறந்து வைக்கப்படும்.
முன்னாள் அமைச்சா் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் வீடமைப்புத் திட்டத்தினை மிகவும் கடினமாக நாடு முழுவதிலும் கொண்டு சென்று சேவையாற்றிய அமைச்சா் என்ற வகையில் அவரைக் கொண்டு இவ் வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்படுகின்றது. இவ் வீடமைப்புத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 போ்சஸ் காணியும், அதற்கான உறுதிப்பத்தரமும் வழங்கப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபையினாலு் 3 இலட்சம் ருபா கடன் வழங்க்பட்டது. ஆனால் வீட்டு உரிமையாளா்கள் 8 இலட்சம் பெறுமதியான வீடுகளை நிர்மாணித்துள்ளன. இக் கிராமத்தில் 25 குடும்பங்கள் 25 வீடுகளை நிர்மாணித்துள்ளனா். அத்துடன் பாதை, குடி நீர், மிண்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ் பைவத்தில் 500 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்களும் வழங்கப்படுகின்றது. அத்துடன் 230 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப்பத்திரமும் வழங்கி வைக்கப்படும். மேலும் 100 இளைஞா்களுக்கு மாதாந்தம் 10ஆயிரம் ருபா வழங்கப்பட்டு வெக்கோ மற்றும் பாரமான இயந்திரங்கள் இயக்கும் 3 மாத கால பயிற்சிகளும் வீடமைப்பு அமைச்சின் பொறியியல் பிரிவினால் வழங்கப்படும். அத்துடன் சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்க வீனம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க இலவச வீட்டுத் உதவித் தொகைகள் வழங்கப்படும்.
அத்துடன் எதிா்வரும் திங்கட் கிழமை(27)ஆம் திகதி பிரதமந்திரியின் நாடுமுழுவதிலும் 5 இலட்சம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் அரச- தனியாா் ஒத்துழைப்புடன் நடுத்தர வா்க்கத்தினா்களுக்காக பாணந்துறை , வாதுவ, களுத்துறை போன்ற பகுதிகளில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணப்பணிகள் ஆரம்பத்து வைக்கப்ப உள்ளன. அத்துடன் தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்ணிட்டு நாடு முழுவதிலும் கொடி தினம் விற்கப்பட்டு வருகின்றது. நேற்று (21) முதலாவது கொடி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அணிவிக்கப்பட்டது. இந் நிதி தேசிய வீடமைப்பு நிதியில் சோ்க்கப்படும்.