திருகோணமலை மூதூரில் மோட்டார் குண்டு மீட்பு...!

எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலிருந்து 60 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டொன்று, நேற்று புதன்கிழமை (15) மாலை மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் காணியில் இராணுவ முகாம் இருந்துள்ளது. யுத்தம் முடிவுற்றதன் பின்னர், உரிய காணிச் சொந்தக்காரரிடம் அக்காணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணிச் சொந்தக்காரர், தனது காணியினை நேற்று புதன்கிழமை துப்பரவு செய்து கொண்டிருந்த போது, குண்டொன்று இருப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் குண்டைச் செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -