ஐந்து மாடுகளை சிறிய வாகமொன்றில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவர் மிருக வதைக் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்துள்ளதாக 07.06.2016 மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாடுகள் சிறிய வாகனம் ஒன்றில் மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்திலிருந்து இறைச்சிக்காக அறுப்பதற்கென கொண்டுசெல்லப்பட்டதாக கரடினாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்ஆர்பீ சேனநாயக்க தெரிவித்தார்.
சந்தேக நபரான வாகனத்தின் சாரதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த வாகனத்தில் எருமை பசு ஒன்றும் சாதாரண நான்கு மாடுகளும் காணப்பட்டுள்ளன.
இந்த மாடுகள் குறித்த வாகனத்தில் எழுந்து நிற்பதற்குக்கூட இடமின்றி அவஸ்தையுடன் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.