மனோ முஸ்லிம் தலைமை கட்சிகளுடன் உள்ள தொடர்பை டோர் ஹட்ரெம் சந்திப்பில் வெளிப்படுத்தினார்..!

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இந்த சந்திப்பின் போது,இன்று இந்த நாட்டின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான யதார்த்த நிலைமைகளை நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம், அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் எனது நண்பர். கொழும்பில் வெள்ளை வான் மூலம் கடத்தல் உச்ச கட்டத்தில் இருந்த யுத்த பின்னணி காலத்தில் அவர் கொழும்பில் இலங்கையின் நோர்வே தூதுவராக இருந்தார். அப்போது அவர் எனக்கு பெருந்துணையாகவும் இருந்துள்ளார்.

 வடக்கில் கிழக்கில் சொல்லொனா துன்பங்களை சந்தித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், காணிகள் மீள் ஒப்படைப்பு ஆகியவை தொடர்பில் உண்மை நடப்புகளை அவருக்கு நான் எடுத்து கூறினேன். அத்துடன் புதிய அரசியலமைப்பு செயற்பாடு தொடர்பிலும் அவர் உரையாடினார். அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தொடர்பாகவும் அவர் கேட்டு தெரிந்துக்கொண்டார். 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும்,தமிழ் அரசியல் தலைமையும் வடக்கு, கிழக்கிலும், தென்னிலங்கையிலும் ஒருசேர மையம் கொண்டிருப்பதையும், தெற்கில் வாழும் தமிழர்களின் அரசியல் தலைமையாக இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாகி உள்ளதையும் அவருக்கு நான் எடுத்து கூறினேன். 

தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் மக்களின் தலைமை கட்சிகளுடனும் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலமான தீர்வு,தேர்தல்முறை மாற்றம், நாட்டின் ஆட்சி முறைமை ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் உறுதியாக செயற்பட்டு வருவதையும் டோர் ஹட்ரெமுக்கு நான் விளக்கி கூறினேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -