அஹமட் இர்ஷாட்-
அஸ்பாக் கல்குடா அல்-கிம்மாவினால் வருடாந்தம் நடாத்தப்படும் முல்தகல் கிம்மா” கலை கலாசார நிகழ்ச்சி இம்முறையும் ஜுன் 1ம், 2ம் திகதிகளில் மீராவேடைப்பிரதேசத்தில் வெகு விமர்ச்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் விவாத மேடைகள் மற்றும் சிறுவர்களின் குதூகல நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக கல்குடா பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல்களில் சுமார் 15 வருடத்திற்கும் மேலாக முஅத்தின்களாக கடமையாற்றிய சுமார் 20 மூத்த முஅத்தின்மார்கள் கௌரவிக்கப்பட்டனர்.