அளுத்கமை சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்?முஸ்லிம்கள் சீக்கிரம் புரிந்து கொள்வர்

எம்.எஸ்.எம்.சாஹிர்-

ளுத்கமை சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்? உண்மையான சூத்திரதாரிகள் யார்? சதித்திட்டங்களை வகுத்தவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் இன்னும் கொஞ்ச நாளில் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

தெஹிவளை நகர பிதா தனசிரி அமரதுங்கவின் இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்துரையாற்றுகையில்;

சிங்களஇ முஸ்லிம் நல்லிணக்கம் எமக்குப் புதிதான ஒன்றல்ல. ஆரம்ப காலம் முதல் நாம் முஸ்லிம்களோடு இணக்கமாக வாழ்ந்திருக்கின்றோம். எமது மூதாதையர்கள்தான் எமது மெதமூலன கிராமத்துக்கு வயலுக்கு அப்பால் இருக்கின்ற மெத்தஸ்முல்ல கிராமத்தில் ஆரம்பத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றினார்கள். என்ற வரலாறை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இது மட்டுமல்ல, சிறு வயது முதல் நான் முஸ்லிம்களோடு நெறுங்கிப் பழகி இருக்கின்றேன். எனவே, சில பொய்ப் பிரசாரங்களின் காரணமாக சென்ற தேர்தலின் போது எமக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், திருக் குர்ஆன் கூறிய படி இது பொய்யாகத்தான் இருக்கும். பொய் ஒரு காலமும் மெய் ஆகாது. ஆகவே, பொய் அழிந்தே தீரும். அளுத்கமை சம்பவம் தொடர்பாக முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதற்காக வேண்டி இப்படியான பொய்ப் பிரசாரங்களைத்தான் கட்டவிழ்த்து விட்டார்கள். அதில் பொய்யர்கள் ஒருவாறு வெற்றியும் கண்டார்கள். 

இணையத் தளம் மூலமாக உலகமெல்லாம் எனக்கு விரோதமாகப் பரப்பினார்கள். ஆனால், அளுத்கமை சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தவர் யார்? உண்மையான சூத்திரதாரிகள் யார்? சதித்திட்டங்களை வகுத்தவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் இன்னும் கொஞ்ச நாளில் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். எனவே, முஸ்லிம்கள் எப்போதும் என்னை நம்பலாம். இந்த நாட்டிலே முஸ்லிம்கள், அரபிக்கள் வந்த காலம் தொடக்கம் நாங்கள் அவர்களோடு மிக நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்கள். முஸ்லிம்கள் சம்பந்தமாக நான் என்றும் குரல் கொடுத்திருக்கின்றேன். முஸ்லிம் நாடுகள் இன்றும் என்னோடு தொடர்பு வைத்துள்ளன. 

பலஸ்தீனத்துக்காக வேண்டி கடந்த 25 வருடங்களாக பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக, நாம் ஒவ்வொரு முறையும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற போதெல்லாம் பலஸ்தீனத்தைப் பற்றி பேசியிருக்கின்றேன். அதற்கு மரியாதை செலுத்தும் முகமாக பலஸ்தீனத்தில் ஒரு நகரத்திலே என்னுடைய பெயரைக் கூட ஒரு பாதைக்கு சூட்டியிருக்கின்றார்கள். அவ்வளவு மதிப்பு உலக முஸ்லிம்களிடத்தில் இருக்கின்றது. இதனை இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் இப்பொழுது புரிந்து கொண்டு வருகின்றார்கள். பொய்யை உதறித் தள்ளிவிட்டு உண்மையை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். 

வர்த்தகத்துறையில் அவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிருந்து அவர்களை மீட்குமாறு அவர்கள் என்னிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்கு ஏனைய சிங்கள, முஸ்லிம், தமிழர்களோடு ஒன்றிணைந்து உண்மையான நல்லாட்சியை உருவாக்குவதற்கு எல்லோரும் எமக்கு உதவி செய்ய வேண்டும். 

இது புனிதமான ரமழான் மாதம் என்னை நோன்பு திறக்கும் நிகழ்வுக்காக அழைத்திருக்கின்றீர்கள். மூன்றாவது முறை நான் வந்திருக்கின்றேன். நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கம் துஆக்களை இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்.அதனை நானும் நம்புகின்றேன். 

ஆகவேஇ இந்தக் காலங்களில் நோன்பு திறக்கும் நேரங்களில் இந்த நாட்டிலே ஒரு நல்லாட்சியும் உருவாக வேண்டும். முஸ்லிம்களும் பலமிக்கவர்களாக, செல்வமிக்கவர்களாக , குறைவின்றி வாழக் கூடிய ஒரு ஆட்சியை எங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பிரச்சினைகள் இல்லாத ஆட்சி யை ஏற்படுத்த வேண்டும் என்று உங்களுடைய ஏனைய பிரார்த்தனைகளோடு எம் நாட்டுக்காகவும் நம் நாட்டு நல்லாட்சிக்காகவும் துஆக் இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

அத்தோடுஇ இப்பொழுது மக்களுடைய வாழ்கைச் சுமை தாங்க முடியாது கஷ்டப் படுகிறார்கள். எனவே மீண்டும் மீண்டும் நான் வருவேன். என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில், கலீல்மௌலவி சிங்களத்தில் ஒரு விசேட பயான் செய்தார். அதனை முன்னாள் ஜனாதிபதி, 'இப்படியான மௌலவிமார்கள் இருப்பதன் மூலமாக நல்லிணக்கத்தோடு சகலரும் வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு எந்தவிதமான தடையும் இருக்காது என்று வெகுவாகப் பாராட்டினார்

இவ்விப்தார் நிகழ்வில், அனைத்துப் பள்ளிவாசல் மௌலவிமார்கள், கதீப்மார்கள். முஸ்லிம் பிரதானிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -