ஜுனைட்.எம்.பஹ்த்-
முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படும் புனித ரமழான் காலம் இதுவாகும்.. இக்காலப்பகுதியில் அதிகமாக முஸ்லிம்கள் இறை வணக்கம்களில் ஈடுபடுவது தான தர்மங்கள் செய்வது அல் குர் ஆன் ஓதுவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவார்கள்..
அதிகமாக வீடுகளிலும் கடைத் தெருக்களிலும் அல் குர் ஆன் வசனங்கள், மார்க்க சொற்பொழிவுகள் ஒலித்துக்கொண்டிருக்கும்..
அதே போல் தற்போது காத்தான்குடி நகரம் எங்கும் புதுமையாக அல் குர் ஆன், ஹதீஸ் போன்றவைகள் எழுதப்பட்ட சுவரொட்டிகளை கானக்கூடியதாகவுள்ளது.
இந்த நற்காரியத்தை செய்வர்களின் நோர்க்கம் இறை நன்மை பெற்றுக்கொள்வது மாத்திரம் போலும் ஏனனில் எந்த ஒரு அமைப்பின் பெயரோ அல்லது தனி நபர், நிறுவனத்தின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
அதிலும் இவ் சுவரொட்டிகளில் எழுதப்பட்ட குர் ஆன், ஹதீஸ் வசனங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.