சிரந்தி ராஜபக்ஷ்வின் சுற்றுலா செலவை செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ்வின் ஹோட்டல் கட்டணத்தை செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக சிரந்தி ராஜபக்ஷ் சென்றிருந்தார் எனவும், பிரான்ஸின் பாரிசில் ஒரு இரவிற்கு 25,73,746 ரூபா என்ற அடிப்படையில் அறை ஒதுக்கப்பட்டு தங்கயிருந்தார் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஸ டி சில்வா,

இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு கோரி ஹோட்டல் பில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிராந்தியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனையவர்களும் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அளவிலான அறைகளை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளனர்.

அறைகளை ஒழுங்கு படுத்துவதற்காக தலா 700 யூரோக்களும், மினி பார்களுக்காக தலா 371 யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளது.மக்களின் பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்யும் விரயங்களுக்கான செலவுகளை அரசாங்கமே செலுத்த நேரிட்டுள்ளது எனவும் மக்களின் பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்யும் விரயங்களுக்கான செலவுகளை அரசாங்கமே செலுத்த நேரிட்டுள்ளது எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -