மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த திருத்தத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டும். தேர்தலின் போது சமர்ப்பிக்கப்படும், வேட்பு மனுக்களில் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்க்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.