அரசாங்கத்திலிருந்து விலகுவேன் – பாலித தெவரப்பெரும எச்சரிக்கை

மீகாதென்ன பாடசாலையில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்கள் சிலர் சேர்த்துக் கொள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும், அவருடன் இணைந்த குழுவினரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து பதவி விலகப் போவதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாலிந்த நுவர, வலலாவிட்ட, நியாகம, மதுராவெல பிரதேச சபைகளின் முன்னாள் எதிர்கட்சி உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வரை போராட்டத்தினை முன்னெடுக்கவும், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -