பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் நகரப்பகுதி எங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை அழைத்துச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது மகளின் பிறந்த நாள் கேக் வெட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த போஸ்டரில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு காணாத உறவுகளை தேடி அலைகின்றோம் கண்ணீர் துடைக்க ஆளில்லை என்றும் சரவணபவன் எம்.பி மகளுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் தலைக்கு சிவப்பு நிற வட்டம் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.