எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் 2016/2017 ஆம் ஆண்டுக்கான நிருவாக தெரிவும் 2016-06-04 ஆம் திகதி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் அல் ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனிபா கலந்துகொண்டார். இங்கு மாவடிப்பள்ளி ஸஹ்து அரபிக்கல்லுரியின் விரிவுரையாளர் மௌலவி ஐ.எல்.எம்.றஹ்பி ஸகாத்தின் மகத்துவம் பற்றிய பரந்த விளக்கமளித்தார்.
இங்கு இடம்பெற்ற 2016/2017 ஆம் ஆண்டுக்கான நிருவாக தெரிவில்
தலைவர்: அல் ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம்
செயலாளர்: யூ.எல்.எம்.ஜௌபர்
பிரதித்தலைவர் : மௌலவி ஐ.எல்.எம்.றஹ்பி
உப தலைவர்: அல் ஹாஜ் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (றஸாதி)
பணிப்பாளர்: ஏ.சி.சமால்தீன்
உதவி பணிப்பாளர்: யூ.எல்.எம்.ஹனிபா
உப செயலாளர்: யூ.கே.காலிடீன்
பொருளாளர்: எம்.ஐ.நிபாயிஸ்
உப பொருளாளர்: அல் ஹாஜ் ஏ.மஹ்ருப்
நிருவாக குழு உறுப்பினர்கள்:
எம்.வை.எம்.ஜௌபர்
எம்.வை.அமீர்
எம்.ஐ.இஸ்மாயில்
சாக்கீர் ஹுசைன்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் மஹல்லாக்கள் சார்பில் 38 பேரும் மரைக்காயர் சார்பில் 5 பேரும் உலமாக்கள் சார்பில் 5 பேரும் வர்த்தகர்கள் சார்பில் 5 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.