”விவசாயிகளுக்கு பெரும் அநீதி ” உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத்-

மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரம் வேண்டி நிற்கும் நாம் மாகாண சபைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பாவிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மகாண சபை அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் (21) நடைபெற்ற போது பொத்துவில், மூதூர், குச்சவெளி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் உப-அலுவலகங்களை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களாக தரமுயர்த்த கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரி தனிநபர் பிரேரனை சமர்ப்பித்து உரையாற்றும் போதே உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 

கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த போது பொத்துவில், குச்சவெளி, மூதூர் பிரதேசங்களில் கிழக்கு மகாண நீர்ப்பாசன உப-காரியாலயங்களை அர்ப்பணிப்போடு உருவாக்கி கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண ஆளுனர், அமைச்சரவை, மற்றும் மாகாண சபை அனுமதியுடன் திறந்து வைத்தோம். குறித்த மூன்று உப-காரியலயங்களும் கடந்த 07 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதுடன், கிழக்கு மாகாணத்தில் வாழும் விவசயாக் குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.

இந்த மூன்று காரியாலயங்களையும் தரமுயர்த்துவதன் ஊடாக மேலும் சிறந்த சேவையினை வழங்கலாம் என்பதனை கருத்தில் கொண்டு குறித்த 03 உப-காரியாலயங்களை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களாக தரமுயர்த்துவதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை அமைச்சரவை அனுமதி வழங்கியும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இதுவரையும் இக் காரியாலயங்கள் தரமுயர்த்தப் படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்கின்றது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் கூட்டங்களிலும் தெரிவித்த போதும் விரைவில் தரம் உயர்த்ப்படும் என உத்தரவாதம் வழங்கிய போதும் தொடர்ச்சியாக இவ்விடயம் நிறைவேற்றப்படாமல் இருப்பது கவலையான விடயமாகும்.

இப்போது தடைகள் எதுவுமில்லை. மத்திய அரசாங்கத்தில் ஜனாதிபதியுடைய ஆட்சி எமது மாகாண சபைக்கு ஆதரவாக இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை ஆளுனரும் ஏறத்தாள சார்பான நிலையில் இருக்கின்றார். கிழக்கு மாகாண சபையிலும் ஆதரவு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி நாங்கள் ஆரம்பித்து வைத்தவைகளையும், புதியதாக உருவாக்கப்பட்ட விடயங்களுக்கும் நீங்கள் உச்சாகம் அளித்து செயற்பட வேண்டும்.

நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல அரசியல் சூழ்நிலையினை பயன் படுத்தி மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையின் அதிகாரங்களை பெறவேண்டிய நாம், கடந்த ஆட்சிக் காலத்தில் கடும் போக்காளர்கள் மத்தியில் விவசாயிகளின் நலன் கருதி நீர்ப்பாசன உப-காரியாலயங்களை அமைத்து பொறியியலாளர் காரியாலயங்களாக தரமுயர்த்துவதற்கு எல்லா நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்த போதிலும் கிழக்கு மாகாண சபை ஆட்சி மாற்றத்தின் பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனையான விடயமாகும்.

மூதூர், தோப்பூர், சம்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் நீண்ட தூரம் பிரயாணம் செய்து திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன காரியாலயத்திற்கு வந்து பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது நீர்ப்பாசன நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்தனர். இது போன்றுதான் புல்மோட்டை, குச்சவெளி போன்ற விவசயாயிகளும் தூரப் பிரயானம் செய்து திருகோணமலை நகருக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பானமை, பொத்துவில், லகுகல பிரதேச விவசாயிகளும் நீண்ட தூரம் பயணம் செய்து தம்பிலுவில் நீர்ப்பாசன காரியாலயத்திற்கு வரவேண்டியிருந்தது. 

காரணங்களும், ஒவ்வொரு சாக்குப் போக்குகளை கூறி காலத்தை வீணடிக்கக் கூடாது. இழுத்தடிப்பது இந்த கிழக்கு மாகாண மக்களுக்கு செய்யும் குறிப்பாக விவசாயிகளுக்கு பெரும் அநீயாயமாகும். இதில் இன வாதம் என்கின்ற கதைக்கு இடமே இல்லை. இனம், பிரதேசம், கட்சி வேறுபாடு பார்க்காமல் பணி செய்து வந்திருக்கின்றோம். நாங்கள் எப்போதும் இந்த சபையில் நல்ல விடயங்களைப் பற்றி பேசுவோம். இவ்விடயத்தில் நாம் ஒற்றுமையாக இருப்போம்.

எனவே, இந்த நீர்ப்பாசன உப-காரியாலயங்களை கிழக்கு மாகாண தவிசாளரும், நீர்ப்பாசன அமைச்சரும் இணைந்து ஏழை மக்களுக்கு பணி செய்யும் பொறியியலாளர் காரியாலயமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இதன் மூலமாக எதிர்காலத்தில் இப்பிரதேசங்களில் விவசாயங்களை சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -