மரிச்சிகட்டி- புத்தளம் பாதை மீண்டும் மூடபட்டுள்ளது..!

எஸ்.எச்.எம்.வாஜித்-
ரிச்சிகட்டியில் இருந்து வில்பத்து ஊடாக இலவங்குளம் செல்லும் ஒற்றையடி பாதை மீண்டும் மூடபட்டு இருப்பதாக மரிச்சிகட்டியில் உள்ள வன விலங்கு அலுவலக அதிகாரி கமேகெ தெரிவித்தார்.

இந்த பாதை ஏன் மூடபட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளும் நோக்குடன் அவரை தொடர்பு கொண்டு எமது செய்தியாளர் வினவிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்;

இந்த பாதையின் ஊடாக செல்லும் முன்று பாலங்கள் உடைந்து உள்ளதாகவும், சில இடங்களில் மோட்டார் வண்டி கூட செல்ல முடியாத நிலையில் "சேராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த பாதை மீண்டும் திறக்க விடக் கூடாது என்ற நோக்கில் சூழற்பாதுகாப்பு அமைப்புகள், இனவாதம் பேசும் குழுக்கல் வழக்கு செய்து இன்று வரைக்கும் வழக்கு இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இந்த நல்லாட்சி அரசின் வனவள அமைச்சர் கூட கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்ந பாதை இன்னும் சில வாரங்களில் மூடப்படும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் பிரதிபலனாக தான் இந்த பாதை மூடபட்டு இருக்கலாம் என்று வடமாகாண மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த பாதையினை தடை செய்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேரினவாத சில அமைப்புகள் முயற்சித்து வருவதாகவும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குயேற்ற அமைப்பு குற்றம் சுமத்தி உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -