சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலும், பிராந்திய அமைச்சருமான சரத்பொன்சேகாவுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கான நுழைவு விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்காகச் சமர்ப்பித்த நுழைவிசைவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தனது புதல்விகளைப் பார்ப்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவர் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்காக நுழைவு விசா வழங்க அமெரிக்கா மறுத்திருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.
எனினும், சரத்பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர் மகிந்த குமார, இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.