மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பசில் ராஜபக்ஷ..!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மீண்டும் தீவிர மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உள்ளுர் விமானப் போக்குவரத்தில் மோசடி, இராணுவ வீரர்களை தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியமை மற்றும் 14 அரச வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கே அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்களில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -