புளுமெண்டால் வீடுடைப்புபற்றி அமைச்சர் மனோ கூறியதுடன் அமைச்சரவையில் வாதவிவாதம்




டகொழும்பு புளுமெண்டால் ரயில் பாதையோரத்தில் வாழும் ஏழை மக்களின் வீடுகளை எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் உடைத்தெறிய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் கொழும்பு மாவட்ட எம்பியும், அமைச்சருமான மனோ கணேசன், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்துள்ளார். இதையடுத்து அமைசர் மனோ கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுசில் பிரேமஜயந்த, மேல்மாகாண மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இடையில் சூடான வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டன. 

இறுதியில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுடைப்பதை நிறுத்தி, இந்த பிரச்சினையை கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொழும்பு மாவட்ட அமைச்சர்களும், எம்பிக்களும், கலந்து பேசி மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டம் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

“வடகொழும்பு புளுமெண்டால் ரயில் பாதையோரத்தில் வாழும் ஏழை மக்கள், கடந்த ஜனவரி ஜனாதிபதி தேர்தலின் போது உங்களை ஆட்சிபீடத்தில் அமர்த்த நூற்றுக்கு நூறுவீதம் எமக்கு வாக்களித்தவர்கள். 

பின்னர் ஆகஸ்ட் பொது தேர்தலின் போதும் மீண்டும் எம்மை முழுமையாக ஆதரித்தவர்கள். எனவே இந்த மக்களை நடு வீதியில் நிறுத்திவிட்டு எனக்கு ஒரு அரசியல் பயணம் கிடையாது. இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர் இவர்களை இப்போதைய இடத்தில் இருந்து அகற்றவேண்டும். அதற்கு இந்த மக்களும் தயார்”,என நான் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெளிவாக ஜனாதிபதியிடம் இதுபற்றி பிரஸ்தாபித்தேன்.

புகையிரத திணைக்களம் உள்வரும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, ஒரு குடும்பத்துக்கு இரண்டரை இலட்சம் ரூபா வழங்கி வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டதாக சொன்னார். ஆனால் அத்தகைய எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும்,எப்படியிருந்தாலும் ஒரு கழிவறை கூட கட்ட முடியாத இரண்டரை இலட்சம் ரூபாவில் மாற்று வீடுகள் ஒருபோதும் கட்ட முடியாது என நான் கூறினேன். 

இதையடுத்து தனது அமைச்சு மூலம் மாற்று வீடுகள் கட்டி தர முடியும் என்றும், அதற்கான நிதியை ஒதுக்கி தர பெற்றோலிய துறை அமைச்சும், போக்குவரத்து துறை அமைச்சும் முன்வர வேண்டும் என மேல்மாகாண மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். இந்த நிதியை ஒதுக்கி தருவது யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுடைப்பதை நிறுத்தி, இந்த பிரச்சினையை கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொழும்பு மாவட்ட அமைச்சர்களும், எம்பிக்களும், கலந்து பேசி மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -