குருநாகல் வைத்தியசாலையில் தீ..!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

4:30 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. என்றாலும் சில நோயாளர் வாட்டுகள் சேதமடைந்துள்ளன.

சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -