எம்.எஸ்.எம்.சாஹிர்-
புனித ரமழான் நோன்பை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு, நேற்று(28) செவ்வாய்கிழைமை மாலை 5.00 மணி தொடக்கம் ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்றது.
இவ்விப்தார் நிகழ்வில், ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது,
விசேசமாக மத விழுமியங்கள் எல்லாம் நன்நெறிகளுடன் வாழ்ந்து நல்ல சமூகம் ஒன்றை உருவாக்குவதன் நோக்கிலேயே போதிக்கப்படுகிறது. அந்த வகையில் நம் நாட்டு முஸ்லிம்களும், உலக வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் இந்த இப்தார் நிகழ்ச்சிகளை வெகு சிறப்புடன் ஏற்பாடு செய்கின்றனர். முழு உலக வாழ் மக்களுக்கும் இதன் மூலம் நல்ல முன்மாதிரிகள் வழங்கப்படுகின்றன. உபவாசம்(நோன்பு) இருந்து அதனை நிறைவு செய்யும் இத் தருணத்தில் இலங்கை அரசு என்ற வகையில் இந்தத் தருணத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆசிர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.
நாட்டின் சமாதானம் ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்காக இதன் போது ஆசியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள், உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.