கொலை, மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒரு எம்.பியின் வீட்டில்...!

கொலை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ளதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் குழுவினருடன் இன்று (21) அப் பகுதிக்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வாகனம் கடந்த ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் வசம் இருந்ததாகவும், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எனவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன்போது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்ட அவர், ஜீ.ஈ 2034 என்ற இலக்கத் தகடுள்ள வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என, வினவியுள்ளதாகவும் அதற்கு குறித்த அதிகாரி இல்லை எனவும் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து, கருத்து வெளியிட்ட ஆனந்த அளுத்கமகே இந்த வாகனம் கொலை, கடத்தல், ஊழல் மோசடி போன்ற பல விடயங்களுடன் தொடர்புபட்டதாகவும், இது குறித்து நாவலபிடிய மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தால் குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனத்தை தேடும் படி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் மூன்று, நான்கு கோடிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது பற்றி பேசுகையில் இதுபோன்றதொரு வாகனம் ஒரே இடத்தில் தரித்து வைக்கப்பட்டிருப்பதற்கு பதிலான அதன் மூலம் பயனைப் பெற வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -