வாக்களித்த கல்குடா மக்களுக்கு கணக்கறிஞர் றியாலின் கைமாறு என்ன?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

டந்த பாரளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய பட்டியல் தொடர்பான எதிர்பாப்பு வலுவிழந்து வருக்கின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் இருப்பை உறுதிப்படுத்துவதில் பிரதான பங்கு வகிக்கும் கல்குடா பிரதேசம் தொடர்பிலான அக்கறை வலுவிழந்து போகின்றதா? என்கின்ற பரவாலான குறைபாடு முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்களிக்கும் மக்கள் மத்தியிலே அதிகரித்து வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக ஒரு நியாயமான ஆதங்கம் பொறுத்தமானதாக மக்களினால் முன்வைக்கப்படுவதனை அவதானிக்க கூடியாக இருக்கின்றது. குறிப்பாக கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் பிரதேச உரிமை சார்ந்த விடயங்களாக இருப்பினும் சரி அல்லது அபிவிருத்தி சார்ந்த விடயங்களாக இருப்பினும் சரி தேசிய அரசாங்கத்தின் பங்களிப்புடன்பான விடயங்களை கல்குடா பிரதேசத்திற்கு பெற்றுக்கொடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கல்குடா பிரதேசத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்கின்ற விமர்சன போக்கு தற்பொழுது வலுப்பெற்று வருக்கின்றது.

அது சார்ந்த விடயக்களாக

01) கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கல்குடா மக்களின் காணிப்பிரச்சனை, பிரதேச செயலகங்களின் எல்லை பிரச்சனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச சபை உறுவாக்கம் தொடர்பான பிரச்சனைகளும் போன்ற உரிமைகள் தொடர்பான அனேகமான விடயங்களில் கல்குடா பிரதேசத்தின் தேவை பற்றி தலைமை உணர்ந்திருக்கின்ற அதே வேலையில், அவற்றை நிறைவு செய்ய கூடிய அரசியல் அதிகாரம், சட்ட ரீதியாக கையாளக்கூடிய ஆள்வளம் போன்றவற்றை தன்வசமும் வைத்திருக்கின்றது. ஆகவே அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமையானது கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் கவலையினை தோற்றுவித்துள்ளது.

02) அபிவிருத்தி தொடர்பான விடங்களில் மத்திய அரசாங்கத்தின் ஊடாக அல்லது முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பு வகிக்கின்ற அமைச்சுக்களின் ஊடாக அபிவிருத்தி விடயங்கள் கல்குடா பிரதேசங்களில் உரிய முறையில் உள்வாங்கப்படுவதில்லை. அதற்கு எடுத்துக்கட்டாக கல்குடா மக்களின் முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனையினை தலைவர் தெளிவாக தெரிந்திருந்தும் அதற்கான ஒரு விரைவான தற்காலிக தீர்வையாவது ஏற்படுத்தும் விடயத்தில் போதிய கரிசனை காட்டப்படாத நிலை தொடர்வதாக கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ்சிற்கு வாகளித்த மக்களினுடைய ஆதங்கமாக இருக்கின்றது.

அதே போன்று கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தலைமையினால் வேட்பாளராக களமிறக்கப்பட்ட றியாலுக்கு தேசியப்பட்டியல் கொடுக்கப்படாத நிலையில் தனது பிரதேசத்தில் உள்ள சில குறைபாடான அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னேற்றுவதற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் 2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து தனது கல்குடா பகுதிக்கு சுமார் 85 இலட்சம் பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதேச நிருவாக உயர் உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைய அடையாளம் காணப்பட்டு அவற்றினை கல்குடா பகுதிக்கு வழங்குமாறு கோறியிருந்தார்.

இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக் மற்றும் சல்மான் போன்றோருக்கு மூன்று கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தும், கல்குடாவில் இருந்து றியாலினால் கொடுக்கப்பட்ட கோரிக்கை நியாயமாக இருந்தும் குறிப்பிட்ட நிதியில் இருந்து கல்குடாவின் அபிவிருத்திக்கு ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை. இவ்வாறான சிறிய விடயங்களில் கூட கல்குடா புறக்கணிக்கப்படுவதானது கல்குடாவின் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

எனினும் கிழக்கு மாகாண சபை ஊடான கல்வி துறை மற்றும் வீதி அபிவிருத்தி விடயங்களில் இவ்வருடம் கல்குடாவிற்கு அதி கூடிய நிதி ஒதுக்கிடுகள் முதலமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமடினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு பிரதேசவததிற்கு அப்பாற்பட்டு கிழக்கு மாகண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கின் கணிசமான அபிவிருத்திகள் கல்குடாவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருந்தும் ஒரு பிரதேசத்தில் மாகாண சபைகள் ஊடான அபிவிருத்திகள் மாத்திரம் போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்யக் கூடியதாக அமையாது. மத்திய அரசினூடான ஒதுக்கீடுகள் சமாந்தரமாக பெறப்படும் நிலையிலேயே அப்பிரதேசம் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகர்வடைய கூடியதாக இருக்கும். அந்தவகையிலே கல்குடாவின் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலினை முன்னெடுக்கும் உயர் பீட உறுப்பினரான றியால் தலைமைத்துவத்திற்கு போதிய அழுத்தங்களை பிரயோகித்து எதிர்கால அபிவிருத்தி விடயங்களில் கல்குடாவை மையப்படுத்த கூடிய வகையில் தலைமைத்துவத்தில் மத்தியில் உறுவாக்க தகுந்த வெற்றிகரமான முடிவினை எடுக்க வேண்டும் என்பது கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் பலத்த எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தற்பொழுது கல்குடாவை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சரின் அபிவிருத்தி போக்கானது மாவட்டத்தில் சகல பிரதேசங்களையும் சமநிலை கொண்டு முன்னெடுக்கப்படுவதனால் கல்குடாவிலிருந்து விடுக்கப்படுகின்ற அனேகமான கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ஊடாகவும் தனக்கு போட்டியாக கல்குடாவில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட றியாலினூடகவும் பெற்றுக்கொள்ளுமாறு கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். பிரதி அமைச்சர் அமீர் அலியின் அந்த கருத்தினை ஆழமாக சிந்திப்போமானல் பிரதி அமைச்சர் அமீர் அலியின் கல்குடா முஸ்லிம் பிரதேசத்து வாக்கு வங்கியில் இருந்த கணிசமான வாக்குகளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசினால் களமிறக்கப்பட்ட றியால் பெற்றுக்கொண்டமையினால் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளின் ஆதரவினோடு தெரிவு செய்யப்பட்ட பிரதி அமைச்சர் அமீர் அலி தான் மேற்கொள்ளும் அபிவிருத்தியினை கல்குடாவிற்கு மட்டும் மையப்படுத்தாமல் சகல பிரதேசங்களையும் சமநிலை படுத்துவதில் நியாயமுள்ளது என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.

எனவே முஸ்லிம் காங்கிரசிற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே கிடைக்கின்ற ஒரு கட்சி ஆசனத்தினை தக்க வைத்து கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்ற கல்குடா மக்களின் அபிவிருத்தி, உரிமைசார்ந்த விடயங்களை எதிர்காலத்தில் மிகக் கூடுதலான முறையில் கவனத்தில் கொண்டு நடமுறைப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரசிற்கும் கல்குடாவினை பிரதி நிதித்துவப்படுத்தி அரசியலினை முன்னெடுத்து வருகின்ற உயர் பீட உறுப்பினர் றியாலுக்கும் இருக்கின்றது என்பது கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் நிலைப்பாடாகும்.

கல்குடா பிரதேச நிருவாக உயர் உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைய சிறிய அபிவிருத்தி திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றினை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து கல்குடா பகுதிக்கு வழங்குமாறு றியாலிடம் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் வாசகர்களின் பார்வைக்கு இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -