அல்பாக்கியாதுஷ் ஷாலிஹாத் பௌண்டேஷனின் றமழான் புனித அல்குர்ஆன் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை (18) காலை 9.30 மணியளவில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் பௌண்டேஷன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.ஏ.எம் முபாறக் (நளிமீ) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம் அஷ்சப் மற்றும் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ மஹ்மூத் பலாஹி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது வரவேற்பு உரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வு கிறாஅத்,தலைமையுரை,வரவேற்புரை,அதிதிகள் உரை என இடம்பெற்றதுடன் இறுதியாக பரிசில் வழங்கலுடன் நிறைவடைந்தன.