கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட அம்பாந்தோட்டை ஷங்கிரிலா ஹோட்டல் திறப்பு நிகழ்வின் போது ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் உட்பட்டவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால பங்கேற்ற இந்த நிகழ்வின் போது வாண வேடிக்கைகளின் தீப்பொறி ஒன்று கூடாரம் ஒன்றில் பட்டவுடன் தீப்பரவல் ஏற்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் குறித்த நிகழ்வில் வாண வேடிக்கைகள் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு ஏற்கனவே நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தும் அது மேற்கொள்ளப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
குறிப்பாக மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் தேசிய புலனாய்வுத்துறை தலைவராக இருந்த கபில ஹெந்தவிதாரன என்பவரே தற்போது ஷங்கிரிலா ஹோட்டலின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுகிறார்.
எனவே அவரின் திட்டமாக இது இருக்கலாமா? என்று கோணத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.