ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஹாபீஸ் நசீர்க்கு வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் பதவி விலகத் தவறினால் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
விரைவில் இந்த ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள முரண்பாடே இதற்கான காரணமாகும்.
கிழக்கு மாகாண முலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தொடாந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின், ஹாபீஸ் நசீர்க்கு பதவி விலகி கட்சியின் வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
அவ்வாறு இன்றி கிழக்கு முதல்வர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முயற்சித்தால் ஜனாதிபதி விரைவில் தீர்மானம் எடுப்பார் என அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.