அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் யோக பயற்சிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை - கல்வி இராஜங்க அமைச்சர்

க.கிஷாந்தன்-

ட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் யோக பயற்சிகளை அறிமுகப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இரதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் 21.06.2016 அன்று செவ்வாய்க்கிழமை அட்டன் டன்பார் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட 38 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் யோக பயிற்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கடராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்;

உலக யோக தினமாக இந்திய வரலாற்றிலேயே இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை மூலமாக கிட்டதட்ட 174 நாடுகள் இதனுடைய அமைப்புக்கு அங்கீகாரம் கொடுத்து இது உலகம் பூராகவும் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலிக்க கூடிய வகையிலேயே உலகம் பூராகவும் இந்த கலை வளர்ந்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கையிலும் இந்த நிகழ்வு கடந்த 18ம் திகதி இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுடைய தலைமையிலும் எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த யோக பயிற்சி எமது உடலுக்கும் உயிருக்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

யோக என்பது ஒரு மனிதனுடைய உடற்பயிற்சி மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்துவதும் நல்ல பண்புகளை கொண்ட மனிதர்களாக உருவாக்குவதும் ஒரு முக்கிய செயல்பாடாகும்.

இன்று அதிகமான நாடுகளில் இப்பயிற்சி சிறப்பாக முன்னெடுப்பதோடு நல்ல விழும்பியங்கள் கொண்ட மனிதர்களாக காண முடிகின்றது. இன்று இலங்கையை பொறுத்த வரையில் இப்பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் இதேவேளை மேலும் சக்திப்படுத்த வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -