நேற்று மாலை கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த சுவிஸ்லாந்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் ஹெயின்ஸ் வோல்கர் நெதர்கூன் முதலமைச்சரைச் சந்தித்து கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்தி சம்மந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு சுவிஸ்லாந்து பாரிய உதவிகளைச் செய்யும் என்று முதலமைச்சரிடம் தெரிவித்த உயர்ஸ்தானிகர் சம்பூர் மக்களின் குடியேற்றம் சம்மந்தமாகவும் அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஏனையவற்றுக்கும் உதவிகள் செய்வதாகவும் குறிப்பிட்டதுடன் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கான விமான சேவையினை வாரத்தில் மூன்று நாட்கள் நீடிப்பதற்கான உதவியினைச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இச்சந்திப்பில் மாகாணக் கல்வி அமைச்சர் சிங்காரவேல் தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களுடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.