அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏழு வீடுகளின் ஜன்னல்களை உடைத்து வீட்டிலிருந்த தங்க நகை, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
பள்ளிக்குடியிருப்பு 2 ஆம் பிரிவு பள்ளி வீதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து ஆறு பவுண் நிறையுடைய 2 காப்பு, 2 மோதிரம், ஒரு மாலையும் பென்ரனும், நெக்கிலஸ் என்பவற்றுடன் ஏழாயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வீட்டுக்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டின் ஜன்னலையும் உடைத்து 16 ஆயிரத்து 800 ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட சென்றுள்ளதாக அவ்வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்
இதேபோல் பள்ளிக்குடியிருப்பு 1ஆம் பிரிவில் ஐந்து வீடுகளின் ஜன்னல்களை உடைத்து கொள்ளையிடுவதற்கு கொள்ளைக்காரர்கள் முயற்சித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.