கோத்தாவின் பாதுகாப்பு மீண்டும் - ஜனாதிபதி, பிரதமர் முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் வரிசை தலைவராக அரசியலுக்கு வருமாறு தனக்கு எவரும் அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை தான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் எனவும் அரசியல்வாதி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படவிருப்பதாக தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பை திரும்ப பெற வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தனக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ பாதுகாப்பை தற்போதும் வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் கோத்தபாய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -