அஷ்ரப் ஏ சமத்-
இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் மனிதருக்கு விளைவிக்கும் ” சித்திரவதை ” குற்றத்திற்கான விழிப்பூட்டும் நடைபவணி இன்று (30) காலை 09.மணிக்கு இலங்கை மனித உரிமை தலைமையகமனான பொரளை ஹிங்சிலி வீதியில் இருந்து சுநத்திர சதுக்கம் வரை நடை பவணி இடம் பெற்றது. இவ் நடைபவணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம் ஓழுங்கு அமைச்சா் சாகல ரத்தனாயக்க மற்றும் சிவில் சமுகங்கள், முப்படைகள் பொலிசாா். பாடசாலை மாணவா்களும் கலந்து கொண்டாா்.
இவா்களுக்கு சித்திரவதை பற்றி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன்.
இலங்கையில் இம் மாதம் மட்டும் 53 பேர் பொலிஸ், நிலையங்களில் மற்றும் சிரைச்சாலைகளில் சித்திரவதை செய்வதாக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைத்துவருகின்றன. அத்துடன் கடந்த ஆண்டு மட்டும் 740 சித்திரவதை முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிக்கா உடகம தெரிவித்தாா்.
ஆனால் இந்த நாட்டில் உள்ள பொது மக்களும் குற்றம் செய்தவரை பொலிசாா் கைது செய்து சித்தரவதை அல்லது வதை செய்தால் ்உண்மையை வரவளைக்காலாம் என்ற போா்வையிலேயே உள்ளனா். இவ்வாறான செயல் தண்டனைக்குரிய குற்றம். மனிதர்களை பிடித்து யாரும் சித்திரவதை செய்ய முடியாது. அவ்வாறு நடைபெற்றால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட முடியும். அதற்கமைய பாதிக்கபட்டவருடைய வைத்திய அறிக்கை மற்றும் சித்திரவதை செய்தவருக்குரிய தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நஸ்ட ஈடும் பெற்றுக் கொடுக்க முடியும். எனவும் தீப்பிக்கா தெரிவித்தாா்
புதிய அரசாங்கம் எதிா்காலத்தில் பொலிசாருக்காக தணியான பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ உள்ளது அவ்வாறானால் எதிா்காலத்தில் மனிதனுக்கு வதை மற்றும் சித்திரவதை சம்பந்தமாக ஒரு பூரண பயிற்சி அளிக்கப்படும். எதிா்காலத்தில் சித்திரவதை குற்றம் குறையும் எனவும் எதிா்ப்பாா்ப்பதாக தீப்பிக்கா தெரிவித்தாா்.