அஹமட் இர்ஷாட் -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் புதிதாக மூன்று மாடி கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஒரு கோடி பத்து இலட்சம் நிதி (11,000,000.00) ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 30.05.2016 திங்கட்கிழமையன்று பாடசாலை அதிபர் SL.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாரூக்..
இவ்வாறான கல்விசார் அபிவிருத்திகளை நாம் செய்ய முற்படும்போது எமது அபிவிருத்திகளை தடுக்கின்ற ஒரு செயற்பாடு அரசியல் காழ்ப்புணரச்சி கொண்டவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கு மிகப்பெரும் உதாரணம் காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கான கட்டடத்திற்கு 55 இலட்சம் ஒதுக்கப்பட்டும் அதனை கட்டவிடாமல் தடுக்கின்றார்கள் இப்போதும்கூட நமது சமூகம் வாய்மூடி இருப்பது என்பது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தார்.