சீனாவில் ஆட்சியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி இஸ்லாமிய மார்க அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
புனித ரமழான் மாதம் உட்பட ஆண்டுதோறும் மத நிகழ்வுகளின் போது இந்த கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஜின்ஜியாங் பிரதேச பொது துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அதிகாரிகள் நோன்பு நோற்பதற்கும், தொழுகை நிறைவேற்றுவதற்கும் தடை விதித்துள்ளனர்.
அப்பிரதேச பள்ளிவாயல்களை மூடுமாறும், உணவகங்களை திறந்து வைக்குமாறும் அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
ஜின்ஜியாங் பிரதேசத்தில் 10 மில்லியனுக்கு அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனா தனது குடிமக்களுக்கு மத சுதந்திரம் வழங்குவதாக பல முறை உறுதி அளித்துள்ள போதிலும் இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மனித உரிமை மீறலாகும் என மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.