காட்டு யானையின் தாக்குதலில் வைத்தியசாலை சேதம்...!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மொறவெவ பிரதேச சுகாதார பராமரிப்பு வைத்தியசாலை காட்டு யானையின் தாக்குதலில் நேற்றிரவு (13) பாதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வைத்தியசாலையின் வைத்தியதிகாரி போல் ரொஷன் காட்டு யானைகளின் தாக்குதளினால் 11 ஜன்னல்களும் 03 கதவுகளும் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் மருந்துப்பொருற்களும் வீசி எரியப்பட்டுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் தொல்லையினாலும் போதியளவு வளப்பற்றாக்குறையினாலும் நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள் இவ்வைத்தியசாலையில் கடமையாற்ற மறுப்பு தெரிவிக்கின்ற கட்டத்தில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள வைத்தியதிகாரி பொதுமக்களின் உதவியுடன் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தார்.

நோயாளர்களின் வருகை அதிகளவில் காணப்படும் இவ்வேளையில் உடனடியான இவ்வைத்தியசாலையை புணரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதேவேளை கடந்த வருடமும் இவ்வைத்தியசாலை யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.

மொறவெவ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல தடவைகள் பிரதேச வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக தெரிவிக்கப்பட்டும் எந்தவொரு அரச மற்றும் அரசியல்வாதிகள் எதுவுத நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் தெரிவித்தார்.

எனவே இவ்வைத்தியசாலையை பாதுகாப்பதற்கு யானை மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -