மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் – ஜனாதிபதி

ன்னும் சில மணித்தியாலங்களில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிராதுருகோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில் பிணை முறி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், அர்ஜூனவை அப் பதவியில் நீடிக்கக் கூடாது என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், சிவில் அமைப்புக்கள், போன்ற தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க, தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை தனது பதவிக்காலத்தை நீடிக்க வேண்டாம் என அர்ஜூன மகேந்தரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -