பேராசிரியர் மஃரூப் இஸ்மாயிலின் மறைவு ஆய்வுப் புலத்தில் நிரப்ப முடியாத வெற்றிடமாகும் - கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை

பி.எம்.எம்.ஏ.காதர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஸ்தாபகருமான திருமதி ஜெசீமா அவர்களின் கணவரான பேராசிரியர் மஃரூப் இஸ்மாயிலின் மறைவு ஆய்வுப் புலத்தில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேரவையின் இணைப்பாளரும், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா (நழீமி) அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது :- 

இலங்கைப் பாராளுமன்றத்தின் 1வது படைக்கலச் சேவிதரான ஜனாப் எம். இஸ்மாயிலின் மகனாகவும், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முதலாவது முஸ்லிம் பீடாதிபதியாகவும் திகழ்ந்த மஃரூப் இஸ்மாயில் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் மருத்துவ விஞ்ஞான துறைகளில் பல்வேறு ஆய்வுப் பணிகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க பன்முக ஆளுமையும், சமூக உணர்வும் உடைய ஜெஸீமா என்ற மனைவியை அடைந்து தன் மனைவியின் சகல சீர் சிறப்புக்களிலும் பங்கெடுத்து மனையாழின் இல்லப் பங்கில் மட்டுமல்ல் சமூக, சமய, சிவில் பங்களிப்புக்கள் அனைத்திலும் அவ்விருவரும் கண்ணும், இமையும் போன்று இணைந்து செயற்பட்ட காட்சிகளை மறக்க முடியாது.

2004 சுனாமிக்குப் பின்னர் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி தென்கிழக்குப் பகுதியில் அறிமுகமாகி பெண்கள் தொடர்பில் வலுவூட்டும் பல்வேறு பணிகளைச் செய்த போது மாதமொருமுறை அதன் மேம்பாட்டை மேற்பார்வை செய்யும் விடயத்தில் முன்னணியின் பெண்கள் குழுவோடு பேராசிரியர் மஃரூப் இஸ்மாயில் இணைந்திருந்து ஊக்கமும், ஆக்கமும் செய்து வந்தமை பெண் செயற்பாட்டாளருக்கு உந்துதலாக இருந்தது.

இதனால் ஏற்படும் பிரயாண அசௌகரியங்களையும் தனது தள்ளாத வயதில் தாங்கிக் கொள்ளும் சக்தி படைத்த ஒரு பிரமுகராக அன்னார் விளங்கினார்.

Former Director of the Medical Research institute மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாரான இவர் தனது காலத்தில் மருத்துவ ரீதியில் ஆற்றவேண்டிய பல பங்களிப்புக்களைச் செய்துள்ளதோடு இளைய தலைமுறை மருத்துவர்கள் பின்பற்றி ஒழுக வேண்டிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை விட்டுச் சென்றுள்ளார்.

இவரது பிரிவால் துயருறுகின்ற அருமை மனைவி ஜெஸீமா, அன்பு மகன்களான ஜெஹான், மர்ஹூம் நௌஸாத், நாதியா, மருமக்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் கிழக்கு முஸ்லிம் கல்விப் பேவை ஆறுதல் வார்த்தைகளை முன்வைக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -