நிதி மோசடி விசாரணைப் பிரிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்சவிடம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைப்பது குறித்து சிங்கள பத்திரிகையொன்று தொலைபேசி மூலம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்த மஹிந்த, நிதி மோசடி விசாரணைப் பிரிவு இருந்தாலும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று என பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிதி மோசடிப் பிரிவு முடிந்தளவு எம்மைப் பற்றி விசாரணை நடத்துகின்றது. சித்திரவதை செய்தார்கள். தற்போது அது இருந்தாலும் பரவாயில்லை, இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
ராஜித உள்ளிட்டவர்கள் தொடர்பிலும் சரியானால் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தப்படாமையே எமக்கு உள்ள பிரச்சினையாகும்.
நான் மிகவும் வெற்றிகரமான ஓர் விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். இன்னும் சில நேரங்களில் நான் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஒருவரை சந்திக்க உள்ளேன்.
ஜப்பானில் வாழ்ந்து வரும் நாட்டை நேசிக்கும் பல இலங்கையர்களை நான் சந்தித்தேன் என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.